2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நடுக்குடா கடற்கரைக்கு அண்மையாக வெடிபொருட்கள் மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 ஜனவரி 25 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றிலிருந்து பெருமளவு வெடி பொருட்களை நேற்று (25) மாலை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பேசாலை நடுக்குடா கடற்கரையோரத்திலுள்ள காட்டுப்பகுதியில் பரல் ஒன்றில் மர்மப் பொருட்கள் காணப்படுவதாக பொது மகன் ஒருவரால் பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அப்பகுதியிலிருந்து பரல் ஒன்றிலிருந்து வெடிபொருட்களை மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .