2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘நந்திக்கடல் பகுதியில் கூட்டுவலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட முடியாது’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘நந்திக்கடல் பகுதியில் கூட்டுவலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட முடியாது’

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கூட்டுவலைகளைப்பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தலைவர் ஞா.அன்ரனி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுகடல் பகுதியான நந்திக்கடல் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சிறுகடல் பகுதியில் தொழில் செய்வதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி அதன்;மூலம் தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் வெளியிடங்களில் இருந்து வரும் சில தொழிலாளர்களாலும் இப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில தொழிலாளர்களாலும் சட்டவிரோத கூட்டுவலை பயன்படுத்தப்பட்டு தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஆண்டில் பெருமளவான கூட்டுவலைகள் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெருமளவான வலைகளும் அழிக்கப்பட்டன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமாசத்தலைவர்,

கடந்த காலங்களிலும் இவ்வாறான கூட்டுவலைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சட்டவிரோதமாக இந்தத்தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நந்திக்கடல் பகுதியில் இறுக்கமான நடைமுறைகள் இல்லாத காரணத்தினால் இந்தக் கூட்டுவலைகளைப்பயன்படுத்தி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நடைமுறைக்கு வரும் வகையில் கூட்டுவலை முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தக்கூட்டுவலைகளைப்பயன்படுத்துவதால் இந்த சிறுகடல் பகுதியில் இயற்கையாகவே உற்பத்தியாகும் இறால், மீன், என்பவற்றின் பெருக்கம் அற்றுப்போவதுடன், கடல்வாழ் ஏனைய உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.

எனவே இக்கடற்பகுதிக்கு கூட்டுவலைகளைப் பயன்படுத்துவது முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .