Editorial / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.கீதாஞ்சன்
நாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல. எனினும் மக்களின் காணிகளையே நாங்கள் கேட்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளனர்.
காணிப்பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் தலமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டத்தில் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடியபோது, படையினர் கடற்படையினர் மிகவும் கோபமாக காணப்பட்டனர். ஏனோ தங்கள் சொத்தை நாங்கள் கேட்பதுபோல் அவர்களுக்கு உணர்வு இருந்தது. எங்கள் மக்கள் சொத்துக்களை மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த ஆவணங்கள் வைத்துள்ள காணிகளை விட்டுத்தாருங்கள் என கேட்கின்றோம். நாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது தலைவிரித்தாடுகின்ற மகாவலி அபிவிருத்தி, தொல்பொருளியல் திணைக்களம், வனவள திணைக்களம் இவ்வாறான திணைக்களங்களுக்கு சார்பாக உருவாக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் எங்கள் காணிகள் பறிக்கப்படுகின்றன. இதனை முன்னிரிமைப்படுத்தி ஆராய வேண்டும்.
வர்த்தமானி அறிவித்தல் சுற்றுநிருபங்களால் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஏற்படுகின்ற அவல நிலையை தடுப்பதுக்கு ஆவண செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago