Editorial / 2019 மார்ச் 26 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
மன்னார் - நானாட்டான் பகுதியில், 07 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 70 வயது வயோதிபரை, நானாட்டான் பொலிஸார், நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.
குறித்த வயோதிபரின் அயல் வீட்டில் வசித்து வந்த சிறுமியே, இவ்வாறு, துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை, குறித்த வயோதிபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, இது தொடர்பில், தனது பெற்றோரிடம் தெரியப்படுத்தியதையடுத்து, பொற்றோர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த வயோதிபரை, நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago