2025 மே 19, திங்கட்கிழமை

நான்கு கால்களும் வெட்டப்பட்டு மன்னாரில் கழுதைக்கு நேர்ந்த கொடூரம்

Editorial   / 2019 நவம்பர் 04 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் - யாழ். பிரதான வீதி, மாந்தை சந்தியில் உள்ள சேமக்காலைக்கு அருகில் நான்கு கால்களும் வெட்டப்பட்ட நிலையில் கழுதை ஒன்றின் உடல் இன்று (4) காலை மீட்கப்பட்டதாக மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.

அப்பகுதியூடாக பயணித்த மக்கள் கழுதை ஒன்றின் நான்கு கால்களும் முழுமையாக வெட்டப்பட்ட நிலையில் காணப்படுவதை கண்டு  மன்னார் நகர சபை உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின், “உடனடியாக நான் இன்று குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன். குறித்த கழுதை மாட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இது தொடர்பாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X