2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நாவல்காட்டில் மரக்கடத்தல்

Niroshini   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு -  முள்ளியவளை, நாவல்காடு பிரதேசத்தில், பாழடைந்த கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் காணப்பட்ட பகுதியை சூழ பாரிய மரக்கடத்தல் இடம்பெற்றதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த உடற்பாகங்கள் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களுடையதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிகளில் யாரும் காணாமல் போனதற்கான தகவல்கள் ஏதும் இல்லை என அறியமுடிகிறது.

அத்துடன், குறித்த பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தும் வருகைதந்து மரம் அறுக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்

இதனை தடுக்க பொலிஸார் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .