2025 மே 23, வெள்ளிக்கிழமை

நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்க முனைந்தார் ஆளுநர்

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்க வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முயன்ற போதும் அதனை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழமையான நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று (24) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுரேன் ராகவன் கருத்துத் தெரிவிக்கையில்,

"இக்கூட்டத்தில் கடந்தவார கூட்டத்தின் அறிக்கை தவிர்க்கப்பட வேண்டும். இது அமைச்சரவைக் கூட்டம் அல்ல அதில்தான் மக்களுக்கு ஒன்றும் சொல்லாமல் அனுமதி தீர்மானம் இடம்பெறும்.

இங்கு இருப்பவர்களுக்கு எடுத்த தீர்மானத்தின் அறிக்கை அனுப்பப்படவேண்டும் அது ஒருவாரத்தில் நடைபெறவேண்டும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன் குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய தீர்வுகள் அனுப்பப்படவேண்டும். அப்போதுதான் கூட்டத்தில் நியாயமான தீர்வினை முன்வைக்கலாம்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது இருக்கின்ற பாரிய ஜந்து பிரச்சனைகளை முன்னெடுப்போம் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிப்போம் அதன் பின்னர் நேரம் இருந்தால் ஏனைய பிரச்சனைகளுக்கு செல்வோம்" என வடமாகாண ஆளுநர் உரையாற்றி முடித்த பின்னர் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்; கம்பரலிய திட்டம் தொடர்பில் பேசலாம் என தெரிவித்தார்.

"கம்பரலிய திட்டம் ஒவ்வொரு பிரதேச சபைக்கும் அரசாங்க அதிபருடன் சேர்ந்து செய்கின்ற விடயங்கள் நீங்கள் தீர்மானம் எடுத்து செல்லுங்கள் இந்த நேரத்தில் எல்லோரும் கூடி தீர்மானக் எடுக்கக்கூடியவையினை முன்வையுங்கள் என ஆளுநர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.  "முக்கிய பிரச்சனைகள் ஐந்தை முன்வையுங்கள்" என்றார்.

ஆனால்  சிவமோன், " நாங்கள் கடந்த கூட்ட அறிக்கையின் படிதான் இதில் கலந்துரையாடி வருகின்றோம் அதில் முதலில் மாவட்டச் செயலகம் ஊடாக செய்யப்படுகின்ற வேலைத்திட்டங்கள் இங்கு வெளிப்படுத்தப்படவேண்டும் அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது வழமை அந்த வழமையினை முறித்துவிட்டு செல்வோமாக இருந்தால் அதில் பிரச்சினை இருக்கும்"  எனத் தெரிவித்தார்.

இதன்போது ஊடகங்களை வெளியேறுமாறும் ஆளுநர் பணித்துள்ளார். இதனை தொடர்ந்து  சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராசா,சிவமோகன் ஆகியோர் ஊடகம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்கள் நேரடி ஒலிபரப்பு யாரும் செய்கின்றீர்களா என வினாவியபோது ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒலிப்பதிவு செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ந்து நிகழ்வு நிரலின் அடிப்படையில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X