2026 மே 02, சனிக்கிழமை

‘நிதி திரும்பியதற்கு அரசியல் மாற்றமே காரணம்’

Editorial   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கொழும்பு அரசியலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே, முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்தாண்டு கம்பெரலிய திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் சென்றுள்ளதாக, பிரதேசச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்தாண்டு அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியானது, அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படாது திரும்பிச் சென்றுள்ளதாக, பல்வேறு தரப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்நிலையிலேயே, கடந்தாண்டு கம்பெரலிய திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி ஊடாக, பல்வேறு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், கொழும்பு அரசியலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, குறித்த வேலைகளை முன்னெடுக்க முடியாது, இந்த நிதி திரும்பியுள்ளதாக, பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .