2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நிதி வராததால் வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு தொகுதி இன்னும் வராததன் காணமாக, வீட்டுத் திட்டம் உட்பட பல்வேறு வேலைத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு 96 மில்லியன் ரூபாய் நிதி வரவேண்டி உள்ளது. இதனால், புதுக்குடியிருப்பு, மாந்தைக் கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, வெலிஓயா ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டம் உட்பட பல்வேறு வேலைத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிதி கிடைத்ததன் பின்னரே, பல வேலைத் திட்டங்களை நிறைவு செய்ய முடியுமென. பிரதேசச் செயலாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X