Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 23 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மனிதப் புதைகுழியின் கார்பன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அதற்கான நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் ஆஜராகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
மன்னார் மனித புதைகுழி தொடர்பான கூட்டம் நேற்று (22) மாலை மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்துரைத்த அவர், குறித்த அறிக்கையானது இடைக்கால அறிக்கை என்பதால் இதனை வைத்துக் கொண்டு முடிவெடுக்க முடியாது என்பதன் அடிப்படையில், பல அறிக்கைகள் வர இருப்பதாகவும் அதனால், அதற்கான நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பேராசிரியர் ராஜ் சோம தேவ அவர்களின் அறிக்கையைப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பாக வைத்தியர்களின் அறிக்கைகளை அதாவது காயப்பட்டது எவ்வாறு? இதில் என்ன நடை பெற்றுள்ளது? போன்ற அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு, அனைத்து அறிக்கைகளையும் முழுமையாக வைத்துக் கொண்டு குறித்த நடவடிக்கையினை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து குறித்த மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகளின் மாதிரிகளை மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி அதற்கான பதில்களை பெற்றுக் கொள்வதா என கூடி முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், எதிர்வரும் மூன்று மாத காலத்தில் அதற்கான அறிக்கையை பேராசிரியர் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சான்றுகள் எதிர்வரும் ஒரு வார காலத்துக்கு பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கிடைக்கப்பெறுகின்ற அறிக்கைகளை வைத்துக் கொண்டு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் சிறுவர்களுடைய எலும்புகள், அல்லது கைவிலங்கிடப்பட்ட எலும்புகள் மற்றும் குவியலாகக் கிடந்த எலும்புகள் போன்றவற்றில் இருந்து எடுக்க முடியுமா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago