Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தில் இருந்து நீர் பின்பக்கமாக வெளியேறுகின்ற சந்தர்ப்பங்களில் அதனைத் தடுப்பதற்கு நிரந்தர கட்டுமாணங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குளத்தின் நீர் மட்டம் உயர்கின்ற போது, குளத்தில் இருந்து பின்வழியாக நீர் வெளியேறுகின்ற போது, மண் மூடைகளை விவசாயிகள் அடுக்கி நீரினைத் தடுக்கின்ற முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
இதுவரை 1,500க்கும் மேற்பட்ட மண் மூடைகள் அடுக்கப்பட்டும் நீர் வெளியேறுகின்ற நிலைமைகளில் மாற்றம் ஏற்படவில்லை.
இனிவருங்காலம் மழை காலம் என்பதால் பெருமளவு நீர் குளத்தில் இருந்து பின்பக்கமாக வெளியேறுகின்ற நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில், குளத்தில் இருந்து நீர் வெளியேறுவதைத் தடுப்பதற்கு நிரந்தர கட்டுமானங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது வன்னேரிக்குளம் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாகும்.
வன்னேரிக்குளத்தின் பின்பகுதியில் தொடர்கின்ற மணல் அகழ்வும் குளத்தில் இருந்து நீர் வெளியேறுவதற்கு காரணமாக அமைந்து உள்ளது. இப்பகுதியில் மண் அகழ்வு இடம்பெற்று ஜெயபுரம் வழியாக பிற இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாக, வன்னேரிக்குளத்தில் கூட்டங்களில் கலந்துகொள்கின்ற அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
2 hours ago