Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, நிலக்கடலை செய்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, நிலக்கடலைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த போகங்களைவிட இப்போகத்தின் போது அதிகளவான நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை மேறகொள்ளப்பட்டிருந்தது,
இந்நிலையில், கடந்த டிசெம்பர் மாதம் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, நிலக்கடலை செய்கைகள் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளன.
அதாவது, கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, அளம்பில், விசுவமடு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு உள்ளிட்ட பகுதிகளில், வெள்ளம் காரணமாக, நிலக்கடலை செய்கைகளில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும், செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைவிட, தற்போது அறுவடை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இடையிடையே மழையுடனான வானிநிலை நிலவி வருவதனாலும், அறுவடைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, செய்கைப்பயிர்கள் தெரிவித்துள்ளனர்.
25 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
51 minute ago
56 minute ago