Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நிலமெஹெவர' ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்ட நடமாடும் சேவை,நேற்று மன்னாரிலும் இன்று (10) நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவிலும் இடம் பெற்றபோதும்,மக்கள் உரிய முறையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்தள்ளனர்.
குறித்த நடமாடும் சேவையின்போது, மக்கள், பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை,ஓய்வூதிய சம்பளப் பிணக்குகள்,சாரதி அனுமதிப்பத்திரம், மூக்குக்கண்ணாடி, ஆலோசனைச் சேவை, காணிப் பிணக்குகள், முதியோர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டிருந்தபோதும்,மக்களின் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மக்களுக்கு உரிய முறையில் அறிவித்தல்கள் வழங்கப்படாத நிலையில், குறித்த நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மக்களுக்கு உரிய வகையில் தெளிவூட்டல்களை மேற்கொள்ளாமையால், மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையின்போது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
எனவே, மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்த்து வைக்க மேற்கொள்ளப்பட்ட குறித்த நடமாடும் சேவையின்போது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமை குறித்து மக்கள் தமது விசனத்தை தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago