2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நீர்க்களைகளை அகற்ற நடவடிக்கை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 ஜனவரி 29 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி குளத்தில் பரந்து காணப்படும் நீர்க்;களைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சிக்குளம் மற்றும் அதனை அண்மித்த இரத்தினபுரம் ஆறு என்பவற்றில் நீர்க்களைகள் குளத்து வாழைகள் படர்ந்து காணப்படுகின்றது.

இவ்வாறு களைகள் அதிகரித்துள்ளமையால் குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், குளத்து நீர் மாசடைந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .