Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Niroshini / 2021 ஜூன் 15 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம், நீவில் பகுதியில் பேராற்றை அண்டிய நெற்செய்கை மேற்கொள்ளும் வயல்களில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை பார்வையிடுவதற்காகவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவும், நீவில் கமக்கார அமைப்பினர், இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர், இன்று (15)அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.
நீவில் பகுதி வயல் நிலங்களில், பாரிய குழிகள் அமைக்கப்பட்டு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை மேற்படி தரப்பினர் நேரில் சென்று உறுதிபடுத்திக்கொண்டனர்.
தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விவசாயிகளோடு கலந்துரையாடினார். குறித்த மணல் அகழ்வை தடுத்து நிறுத்தாவிட்டால் தமது விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன் போது விவசாயிகளிடம் கருத்து தெரிவித்த பொலீஸ் பொறுப்பதிகாரி தனக்கு மேலுள்ள உயரதிகாரியுடன் கலந்துரையாடி கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மணல் அகழ்வு தொடர்பான தகவல்களை தனக்கு அவ்வப்போது தெரிவிக்குமாறும் தனது தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
26 minute ago
40 minute ago