2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன், மு.தமிழ்ச்செல்வன், எஸ்.றொசேரியன் லெம்பேட், எம்.றொசாந்த் 

1 இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள், வடக்கு மாகாணங்களில் உள்ள அனைத்துப் பிரதேச செயலகங்களிலும், இன்று (26) ஆரம்பமாகின.  

இதன்போது, நேர்முகத்தேர்வில், விண்ணப்பதாரிகளை நேர்முகம் காண்பதற்காக ஓர் அரச உத்தியோகத்தரும் இரண்டு இராணுவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.  

இராணுவத்தினரையும் நேர்முகம் காண்பதற்கு இணைந்துக்கொண்டமைக்கு, சமூக ஆர்வலகர்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.  

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில், 890 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில், 6,549 பேரும் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில், 1,578 பேரும் இதற்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .