Niroshini / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி - கருநாவல்பற்று தெற்கு, விவாகப்பதிவாளர் பதவி - புதுக்குடியிருப்பு ஆகியவற்றுக்கான நேர்முகத் தேர்வு, நாளை (23) இடம்பெறாது என, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த நேர்முகத் தேர்வுக்கான திகதி பின்னர் அறியத்தரப்படும் என, முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக செயலாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி - கருநாவல்பற்று தெற்கு, விவாகப்பதிவாளர் பதவி - புதுக்குடியிருப்பு, ஆகியவற்றுக்கான நேர்முகத் தேர்வு நாளை (23) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நாட்டின் தற்போதைய கொரோனா நிலைவரம் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் என்பன காரணமாக, குறித்த நேர்முகத் தேர்வு நாளை (23) இடம்பெறாது எனவும், அவர்; தெரிவித்தார்.
15 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago