Niroshini / 2021 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
'தொழிலாளர்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்படுகின்ற தொழில் சங்கங்கள், தத்தமது சுயநலன்களை மையமாக கொண்டு செயற்படாது, அது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்' என, ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிஷ்ணன் மற்றும் உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீ ரங்கேஸ்வரன் ஆகியோருடன், நேற்று (04), யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தொழில்சார் ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்தியதான இந்த ஜனநாயக ஊழியர் சங்கத்தின் செயற்பாடுகள் மீண்டும் புத்துயிரளிக்கப்பட்டு. திறம்பட செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பின் போது, யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகத்தினர். தமக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏற்றவகையில் இடவசதி இன்மை உள்ளிட்ட தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருருந்தனர்.
குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, காலக்கிரமத்தில் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை முன்னெடுக்கபப்டும் என, மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago