2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நீதி கோரி கையெழுத்து போராட்டம்

George   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி கையெழுத்துப் போராட்டம், எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம், கிளிநொச்சி மாவட்ட சிவில் அமையம் ஆகிய இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி இந்த கையெழுத்துப் போராட்டத்தை நடத்தவுள்ளன.

கரடிப்போக்குச் சந்தி, கிளிநொச்சி நகரம், பரந்தன் சந்தி, இரணைமடுச்சந்தி ஆகிய இடங்களில் சம நேரத்தில் இந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .