2025 மே 22, வியாழக்கிழமை

படகுகளை வாழ்வாதாரமாக வழங்க நடவடிக்கை

Editorial   / 2019 மே 24 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், இறுதிபோரில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட படகுகள் படையினரால் கைப்பற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப்பகுதியில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மக்களின் 50 பைவர்கிளாஸ் படகுகளை அண்மையில் 68ஆவது படைப்பிரிவினர் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இந்தப் படகுகளில் பல படகுககள் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. இந்நிலையில் அவற்றை இனம்கண்டு பிரதேச செயலாளர் ஊடாக கடற்றொழில் செய்யும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகரி எஸ்.கலிஸ்ரன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X