2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

படையினரை அகற்றி மலசலகூடம் அமைத்து தருமாறு கோரிக்கை

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் பிரதேச செயலகத்திற்கு சொந்தமான அரச காணியில் படை பொலிசார் நிலைகொண்டுள்ளார்கள். இந்த பகுதி நீண்ட காலமாக புதுக்குடியிருப்பு நகர்பகுதியின் பொது மலசலகூடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி என, கடந்த மார்ச்மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் படை பொலீசாரை அகற்றி பொது மலசலகூடத்தை கட்டித்தருமாறு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, வடமாகாண சுகாதார அமைச்சர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், பிரதேச தவிசாளர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கு மகஜரும் அனுப்பிவைத்துள்ளனர்.

அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

புதுக்குடியிருப்பு நகர்பகுதியில், பொது மலசலகூடம் தொடர்பான பிரச்சினை, போர் நடைபெற்ற காலப்பகுதியில் இருந்தும் பெரும்பிரச்சினையாக இருந்து வருகின்றது. 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பகுதியில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் தமிழீழ நிர்வாக சேவை இருந்த இடத்தில், பொது மலசலகூடம் அமைப்பதற்கான தீர்மானம் வர்த்தக சங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது போருக்கு பின்னர் படையினரின் படைபொலிஸார் நிலைகொண்டுள்ளார்கள். இது அரச காணியாக காணப்படுகின்றது இந்த இடத்தில் பொது மலசலகூடம் அமைக்கவேண்டும் என்று பலதடவைகள் பிரதேச செயலாளரிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்பகுதிக்கு வணிக நிலையங்களை நாடிவரும் வெளிபிரதேச மக்கள் மற்றும் பிரயாணியகள் மலசலகூடம் இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். எனவே, புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் அமைந்துள்ள அரச காணியில் உள்ள படையினரை வெளியேற்றி, அந்த காணியில் பொது மலசலகூடம் அமைப்பதுதான் சிறந்துள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையான கவனம் எடுத்து பொது மலசலகூடம் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உருவாக்கத்தின் பின்னர், நகர்பகுதியில் அமைந்துள்ள குறித்த காணியினை அரசியல் பின்னணியுடன் குறித்த பகுதியில் பாடசாலைக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X