2025 மே 21, புதன்கிழமை

படையினர் மீது தாக்குதல்; மூவருக்கு வலைவீச்சு

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

புதுக்குடியிருப்பில், படையினரின் சோதனை நிலையத்தில், கடமையில் இருந்த படை வீரரை மதுபோதையில் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை, செப்டெம்பர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், திங்கட்கிழமை (09) உத்தரிவட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை உடனடியாக கைதுசெய்து, மன்றில் முன்னிலைப்படுத்துமாறு, புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்படைய ஏனைய இளைஞர்கள் மூவரையும்  தேடிவருவதாக, பொலிஸார், இன்று (12) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X