2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பட்டாசு வெடித்ததில் வீடு தீக்கிரை

George   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

முல்லைத்தீவு - கைவேலிப்பகுதியில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு, வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது   

எனினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  
தீபாவளி பண்டிகையை, பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், முல்லைத்தீவு கைவேலிப்பகுதியில் உள்ள குறித்த வீட்டின் மீது, சனிக்கிழமை காலை 10.45 மணியளவில், பட்டாசு விழுந்து வெடித்து சிதறியுள்ளது.  

இதனையடுத்து, ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.  

யுத்தம் காரணமாக பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு மக்கள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்குடியேறி சுயமாக தொழில்களில் ஈடுபட்டு முன்னேறிவரும் நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றமை அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

குறித்த வீட்டிலிருந்து எந்தவித பொருட்களையும் மீட்கமுடியாத நிலையில், இந்த வீட்டில் வசிக்கும் பாடசாலைக்கு இரண்டு பிள்ளைகளும், தமது பாடசாலை உபகரணங்கள் முழுவதும் எரிந்துள்ளதால் பெரும் கவலையடைந்துள்ளனர்.  

“கடந்த மூன்று மாதங்களாக எனது கணவர் பிரிந்து வாழ்வதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வாழும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது” என குடும்பத் தலைவி தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .