2025 மே 21, புதன்கிழமை

பணிப்பகிஷ்கரிப்புக்கு மன்னாரிலும் வன்னியிலும் ஆதரவு

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் , க. அகரன்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று (22) முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள  வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலைகளின் வெளிநோயளர் பிரிவுகளின் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தமையால், தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

எனினும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள், வழமைபோல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .