2025 மே 16, வெள்ளிக்கிழமை

பண்டாரவன்னியன் சிலைக்கு படி கட்டியமைக்கு எதிர்ப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டச் செயலகத்துடன் இணைந்தப் பகுதியில், 1981ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பண்டாரவன்னியன் சிலைக்கு அருகாமையில் படி அமைக்கப்பட்டமைக்கு, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். 

தேசிய வீரனான பண்டாரவன்னியனுக்கு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிவசிதம்பரத்துடன், இணைந்து ஊர் பிரமுகர்கள் மாவட்ட சபை தலைவரும் தற்போதைய ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிரேஸ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் ஆகியோர் சிலை அமைத்திருந்தனர். 

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்தக் காலப்பகுதியில் மாவட்டச் செயலக வளாகத்தில் குறித்த சிலை நிறுவப்பட்டு, பண்டாரவன்னியன் நினைவுதினமும் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது. 

எனினும் தற்போது வவுனியா நகரசபை, குறித்த சிலையை பராமரிப்பது என்ற போர்வையில் நினைவு தினத்தில் மாலை போடுவதற்காக படிக்கட்டினை பல இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துள்ளது. 

இந்தப் படிக்கட்டுகள் கம்பீரமாக காணப்பட்ட பண்டாரவன்னியன் சிலையை உரு மறைப்பு செய்யும் வகையிலும் சிலையின் தனித்துவத்தை அழிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

எவரது ஆலோசனையும் இன்றி தன்னிச்சையாக குறித்த படிக்கட்டுகளை அமைத்தமை, தமிழ் மன்னனின் வீரத்தினையும் அவரது சிறப்பினையும் மழுங்கடிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

இந்நிலையில், நாளை (25) பண்டாரவன்னியனின் 217ஆவது நினைவு தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .