Editorial / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
பதிலீடு இன்றி (Replacement) சுகாதார பணியாளர்கள் இடமாற்றப்படுவதனால் மக்களுக்கான சேவையினை நெருக்கடி இன்றி வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த தென்பகுதியை சேர்ந்த மருந்துக் கலவையாளர் ஒருவருக்கு மாற்றீடு இன்றி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஐந்து மருந்தாளர்கள் கடமையாற்றி வருகின்ற வைத்தியசாலையில் இருவர் வெளிநோயாளர் பிரிவிலும், இருவர் மாதாந்த சாய்சாலை (கிளினிக்) பிரிவிலும், ஒருவர் விசேட சிகிச்சை பிரிவிலும் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒருவர் விடுமுறை எடுத்தாலும் நேர்த்தியான சேவையினை வழங்குவதில் வைத்தியசாலை நெருக்கடியினை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் உரிய பதிலீடு (Replacement) இன்றி மருந்துக் கலவையாளர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் என்பன இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன. இதனால் கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கணிசமான பகுதிகளுக்கும் சேவையினை வழங்கி வருகின்ற, நாளாந்தம் அதிகளவான வெளிநோயாளர்கள் மற்றும் மாதாந்த சிகிச்சை நோயாளர்கள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்ற மருத்துவமைனையின் சேவைகளை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த முறையற்ற இடமாற்ற உத்தரவினை வடக்கு மாகாண ஆளுநரின் கடும் அழுத்தம் காரணமாகவே சுகாதாரதுறை உயரதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகவும் ஆளுநர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி உரிய மாற்றீடு இன்றிய இடமாற்றத்தை வழங்குவதற்கு மாகாண மட்ட உயரதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், இதனால் மாகாண மட்ட உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள மாவட்ட மட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கி பணியாளர்களை விடுவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி எஸ். மோகநாதனை தொடர்பு கொள்ள அவரது அலுவலக தொலைபேசி இலக்கத்திற்கு பல தடவைகள் அழைத்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை
30 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago
49 minute ago