Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், பராமரிப்பற்ற நிலையில், அயலவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் காணிகள், மன்னார் நகர சபையால் கையகப்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ள மன்னார் நகர சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், குறித்த காணியின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இவ்வாறான காணிகள் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு பராமரிப்பு இல்லாத நிலையில் காணப்படும் காணிகளின் உரிமையாளர்கள் குறித்த காணிகளை துப்புரவு செய்து உரிய முறையில் பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ள அவர், அவ்வாறு பாராமரிக்காது, பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் காணிகள், மன்னார் நகர சபையால் அடையாளப்படுத்தப்படுமெனவும் கூறினார்.
அதன் பின்னர், நகர சபையால் வழங்கப்படும் கால அவசாகத்துக்கமைய துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளாத பட்சத்தில், அயலவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் காணிகள் மன்னார் நகர சபையால் கையகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த காணி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனக் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .