2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

பஸ்ஸில் ஐஸ் கடத்தியோர் கைது

Niroshini   / 2021 நவம்பர் 04 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னாரில் இருந்து, நேற்று  (03) இரவு 9.30 மணியளவில், கொழும்பு நோக்கி   பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில், சுமார் 250 கிராம் எடைகொண்ட ஐஸ் ரக போதைப்பொருளை கடத்திச் செல்ல முற்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், புத்தளம் மற்றும் சிலாவத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்ள் ஆவர்.

மன்னார் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம், மன்னார் நகரின் பிரதான வீதி பகுதியில்  வைத்து, குற்றத்தடுப்பு பொலிஸார், அவ்வழியில் வந்த பஸ்ஸை சோதனை செய்த போது, குறித்த இரு சந்தேக நபர்களையும், ஐஸ் ரக போதைப்பொருளுடன்  கைது செய்தனர்.

மேலதிக விசாரணையின் பின்னர், சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X