Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 08 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், நடராசா கிருஸ்ணகுமார்
புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்களை மறித்து திருப்பி அனுப்பிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை, இன்று (08), இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்ல பஸ்கள் வந்துள்ளன.
இதன்போது, குறித்த பஸ் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஆடைத்தொழிற்சாலையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, சுதந்திரம் பகுதியில் வைத்து, அப்பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் திரும்பி அனுப்பப்பட்டது.
இதையடுத்து, பஸ்களைத் திருப்பி அனுப்பிய 3 பேர் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்தனர்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்று (08), புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், மிக குறைவான ஊழியர்களே பணிக்கு சமூகமளித்துள்ளதாக தெரியவருகிறது
ஆடைத் தொழிற்சாலையை மூட எடுத்த முயற்சிகள் பயனளிக்காத நிலையில், ஊழியர்களை கடமைக்கு செல்லாமல் தவிர்க்குமாறு, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago