2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’பஸ் சேவையை நடத்தவும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களுக்கு முல்லைத்தீவில் இருந்து பஸ் சேவைகள் நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

2010ஆம் ஆண்டில் இருந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் பஸ் சேவைகள் நடத்த வேண்டும் என கோரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவரும் நிலையிலும், பஸ் சேவைகள் நடைபெறவில்லை.

இதன் காரணமாக, இக்கிராமங்களில் வாழ்கின்ற 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை, முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைதுறைபற்று பிரதேச செயலகம் உட்பட அனைத்து இடங்களுக்குச் செல்வதற்கும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகின்றது.

1990ஆம் ஆண்டுக்கும் முன்னர் முல்லைத்தீவு நகரில் இருந்து இரட்டைவாய்க்கால் வழியாக மாத்தளன் வரை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம் பெற்றன. 

தற்போது பஸ்கள் சேவையில் ஈடுபடாததன் காரணமாக வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .