2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பஸ் நிலையத்தை திறக்குமாறு கோரிக்கை

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் உபநகரங்களில் ஒன்றான மாங்குளம் பகுதிக்கான பஸ் நிலையம் இதுவரை திறந்து வைக்கப்படாமையால், பயணிகளும் பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மாங்குளம் நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் எவையும் இதுவரை சீர்செய்யப்படாத நிலையில், பொதுமக்களும் வர்த்தகர்களும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, மாங்குளம் நகரத்துக்கான பஸ் நிலையம் இன்மையால் முல்லைத்தீவு மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளும் ஏனைய தேவை கருதி அயல் கிராமங்கில் இருந்து வரும் பயணிகளும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அபிவிருத்தி திணைக்களத்தால் நகருக்கான பஸ் நிலையம் அமைக்கப்பட்டு  வேலைகள் நிறைவுறுத்தப்பட்;ட நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக குறித்த பஸ் நிலையம் திறந்து வைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

மேற்படி பஸ் நிலையத்தைத் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X