Freelancer / 2023 பெப்ரவரி 20 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - அரிவியல் நகர் பகுதியில் புகையிரத கடவையை கடந்த போக்குவரத்து சபை பஸ் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் அறிவியல்நகர் ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
பஸ் திடீரென புகையிரத கடவையை கடந்து பயணித்த நிலையில், பஸ்ஸின் பின் பகுதியில் ரயில் மோதியது.
இந்த சம்பவத்தின் போது பஸ்ஸில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.
எனினும், அருகில் நின்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட பீடாதிபதியின் கார் மீதும் பஸ் மோதியதில் கார் முன்பாக சேதமடைந்துள்ளது. R
4 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago