2025 மே 21, புதன்கிழமை

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைபவனி வவுனியாவை அடைந்தது

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலுக்குப் பின்னர், நாட்டில் பாதுகாப்பான நிலை உருவாகியிருப்பதை உறுதிப்படுத்தும் நோக்குடன், மட்டகளப்பு புனித மைக்கேல் கல்லூரியைச் சேர்ந்த ஜனாதிபதி சாரணர்களான துஷாந்தன், சஞ்சீவன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபவனி, இன்று (26) வவுனியாவை வந்தடைந்து.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்கள், நாட்டில் அண்மையில் இடம்பெற்ற குண்டுதாக்குதலுக்குப் பின்னர், நாட்டில் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனினும், தாம் பாதுகாப்பாகவே இருப்பதை வெளிப்படுத்தும் நோக்குடனும், இன ஐக்கியத்தை வலியுறுத்தும் நோக்குடனுமே, குறித்த நடைபவனியை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் மேற்கோண்டுள்ளதாகவும், அவர்கள் மேலும் கூறினர்.

பருத்திதுறையில் சனிக்கிழமை (24) ஆரம்பமான குறித்த நடைபவனி, செப்டெம்பர் 4ஆம் திகதி தெய்வேந்திரமுனையைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .