2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாதை சரியில்லை என திரும்பிய எம்.பிக்கள்

Niroshini   / 2021 ஜூன் 28 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கௌதாரிமுனையில் சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதை சரியில்லை என திரும்பிவிட்டனர்.

கௌதாரிமுனை கடற்பரப்பில், சீன நிறுவனமொன்றால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணை தொடர்பில் ஆராய்வதற்காக, இன்று (28), தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி. சிறிதரன் ஆகியோர், அப்பகுதிக்கு சென்றிருந்தனர். இருப்பினும் அவர்கள் குறித்த இடத்துக்குச் செல்லாது திரும்பிவிட்டனர்.

இது  தொடர்பில் பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கையில்,

'பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்வையிடுவதற்காக, இன்று (28) வருகை தந்தனர். இருப்பினும் அவர்கள் மண்ணித்தலை கோவிலுடன் திரும்பிவிட்டனர்.

'அதற்கப்பால்  செல்வதற்கு பாதை சரியில்லை எனவும் தொடர்ந்து பயணிக்க முடியாது எனவும் தெரிவித்துவிட்டு, திரும்பி விட்டனர்' என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X