2025 மே 05, திங்கட்கிழமை

'பாஸ் இரத்தாகும்’

Niroshini   / 2021 மே 25 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அதிகூடிய விலைக்கு மரக்கறி விற்பனைசெய்யப்பட்டால், பாஸ்  (அனுமதி) இரத்து செய்யப்படுமென, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.

மன்னார் - பஸார் பகுதியில் உள்ள சில மரக்கறி விற்பனை நிலையங்களில் அதிகூடிய விலைக்கு மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவிதத்hர்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னாரில் சில மரக்கறி விற்பனை நிலையங்களில், அதிகூடிய விலைக்கு மரக்கறி விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளதென்றார்.

அவ்வாறான விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில், விற்பனை நிலைய உரிமையாளர்கள் மரக்கறி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சென்று வருவதற்கான பாஸ் இரத்து செய்யப்படுமென்றும், அவர் எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X