2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’பாஸ் நடைமுறைக்கு அனுமதி தேவையில்லை’

Niroshini   / 2021 ஜூன் 01 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வியாபார பாஸ் நடைமுறைக்கு வர்த்தகசங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லையென, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கு. திலீபன் தெரிவித்தார்.

வர்த்தக சங்கத்தின் அனுமதியினூடாக வியாபார அனுமதி வழங்கப்பட்டமை தற்போது நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போதைய பயணக் கட்டுப்பாடு காலத்தில், அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளவதற்காக அரசாங்கம் சில விதிமுறைகளோடு சில வியாபார நிலையங்களுக்கு அனுமதியளித்துள்ளதாகவும், இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில், இந்த அனுமதியைப் பெற வேண்டுமாயின் முதலில் வர்த்தக சங்கத்தின் அனுமதியை பெறவேண்டும் என்கிற நடைமுறை இருந்து வந்ததாகவும் கூறினார்.

இதனால் பல இன்னல்களை எதிர்கொள்வதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தன்னிடம் முறையிட்டதாகத் தெரிவித்த அவர், இதையடுத்து, உடனடியாக ஆளுநரை தொடர்புகொண்டு, மேற்படி விடயத்தை தெரிவித்தி, இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே, இனிவரும் காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி பெறவேண்டுமாயின், நீங்கள் நேரடியாக உங்கள் பிரிவு பிரதேச செயலாளர் ஊடாக விண்ணப்பித்து, அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும், திலீபன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X