Niroshini / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், இனிவரும் காலங்களில் பிசிஆர் பரிசோதனையை அதிகரிப்பதென, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கபபட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டமொன்று, வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மார்ச் 8ஆம் திகதி முதல் டிசெம்பர் 27ஆம் திகதி வரையில், வவுனியாவில் 10,844 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 32 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
14 Nov 2025