Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தினரால் , திங்கட்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், முறிப்பு பகுதியைச் சேர்ந்த யேகேஸ்வரன் அனோயன் (வயது 23) என, குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு - முறிப்பு பகுதியில், சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டும் செயற்பாட்டைத் தடுக்க சென்ற வனவளத்திணைக்கள உத்தியோகத்தர் மீது, தாக்குதல் நடத்தியமை, படையினரின் துப்பாக்கியைப் பறித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களின் கீழ், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தால், குறித்த இளைஞருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், சந்தேகநபர், வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முடியாதவாறும், நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த இளைஞர், திங்கட்கிழமை (09) வௌிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட போதே, குடிவரவு - குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இவரை, நாளை (12) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
13 minute ago
23 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
33 minute ago
37 minute ago