2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’பிரதமர் எங்களை நம்பவில்லை’

க. அகரன்   / 2019 ஜூன் 26 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எங்களை நம்புவதை விட முஸ்லீம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பிர்களையுமே நம்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா பாலமோட்டையில் அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலைய கட்டிடத்தினை திறந்துவைத்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கல்முனை பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தும் செயற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக செயற்பட்டிருந்தது. 
ஆனால் இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோரையும் ஏமாற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்.

எமது பேச்சுக்களின் ஊடாக ஒரு கணக்காளரை நியமிப்பதற்கான கடிதங்களை தற்போதைய அமைச்சராக இருப்பவர் அரச அதிபருக்கு அனுப்பி அதனை நடைமுறைப்படுத்தும் நிலை காணப்படும் போது மீண்டும் அதனை ரத்துச்செய்கின்ற செயற்பாட்டை செய்திருக்கின்றனர். 
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்டிருக்கின்ற அரசாங்கம் கூடுதலாக முஸ்லீம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையுமே நம்புவதாக எனது கணிப்பில் தெரிகின்றது. அவர்கள் அமைச்சராவையில் இருக்கின்ற காரணத்தால் அவ்வாறு இருக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுவான நோக்கம் இந்த அரசியல் தீர்வு கிடைக்கப்பட வேண்டும் என்பதில் மிக ஆளுமையோடு செயற்படும். அதே நேரத்தில் கல்முனை பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவதில் முழுமையாக செயற்பட்டிருந்தோம். தற்போது காலம் மிக கனிந்திருக்கிறது. அந்த வகையில் நாம் ஒட்டுமொத்தமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதாவது கல்முனை விடயம் மட்டுமல்ல எமது அரசியல் தீர்வு விடயமாகவும் சிந்திக்க வேண்டும். 

அது நம்பிக்கை இல்லா தீர்மானம் வருகின்ற போது இந்த அரசிங்கத்தோடு எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் முடிவெடுக்கவேண்டும். அந்த முடிவை அறிவிக்க வேண்டும். இந்த விடயங்களின் ஊடாக சில விடயங்களை நாம் சாதிக்கலாம் என எண்ணுகின்றேன். இந் நிலையில் பிரதமராக இருக்கலாம் ஜனாபதிபதியாக இருக்கலாம் தமிழ் தரப்பினர் தம்மோடு நிற்கமாட்டார்கள் என்ற சந்தேகத்தோடு செயற்படுகின்றனர்.

நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதே அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கேயாகும். கடந்த வரவு செலவுத்திட்டத்திலும் நான் கல்முனை விடயம் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுக்காமையால் நான் நடுநிலமை வகித்திருந்தேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் நான் மட்டுமே இந்த முடிவை எடுத்து செயற்பட்டவன். 

ஆகவே இனியாவது நாங்கள் சந்தர்ப்பங்களை பயன்படுத்தவேண்டும். ஏற்கனவே சில விடயங்களில் நாம் ஏமாற்றப்பட்டிருந்தாலும் தற்போது இருக்கின்ற சந்தர்ப்பத்தினையும் பயன்படுத்தாது விட்டால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கையற்றுப்போகும் வாய்ப்பு முழுமையாக ஏற்படும். என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .