Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, இரட்டைவாய்கால் சந்தி முதல் அம்பலவன்பொக்கணை புதுமாத்தளன் ஊடாக சாலை வரைச்செல்லும் பிரதான வீதி இதுவரைப் புனரமைக்கப்படாமையினால், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் இரட்டைவாய்கால் சந்தியிலிருந்து வரைஞர் மடம் அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, புதுமாத்தளன், பழையமாத்தளன் சாலை வரை செல்கின்ற சுமார் 13 கிலோமீற்றர் நீளமான வீதி இன்று வரை முழுமையாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
குறித்த வீதியின் இடைக்காடு பகுதியில் மாகாணத்துக்கென குறித்தொதுக்கப்பட்ட நிதியின்கீழ், வடமாகாண சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டில் ஒரு கிலோமீற்றர் வரையான வீதி மாத்திரமே புனரமைக்கப்பட்டுள்ளதே தவிர, ஏனைய 12 கிலோமீற்றர் வீதியும் புனரமைக்கப்படாத நிலையில் உள்ளது.
இதனால் இந்த பகுதிகளில் வாழும் மக்கள் தமது அன்றாடத்தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 2013ஆம்ஆண்டு இப்பகுதிகள் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து கடந்த 4 வருடங்களாக இந்த வீதியின் முக்கியத்துவத்தினை கருதி புனரமைத்துத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
58 minute ago