2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’பிரதேச சபையில் நிலவும் வளப் பற்றாக்குறைகள் பெரும் சவால்’

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்க​ரன்

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையில் நிலவும் பௌதீக, ஆளணி வளப் பற்றாக்குறைகள் பெரும் சவாலாக காணப்படுகின்றனவென, கரைதுறைப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் கனகையா தவராஜா தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், 20 வருடங்களுக்கு முன்பு இருந்த ஆளணி விவரங்களே தற்போதும் உள்ளதாகக் கூறினார்.

அத்துடன், வீதிகளைப் புனரமைக்கக் கூடிய வகையில், கனரக வாகனங்கள் இல்லையெனத் தெரிவித்த அவர், இதனால், மேற்படி சபையின் கீழ் உள்ள 784 கிலோ மீற்றர் வீதிகளில் 60 கிலோமீற்றர் வீதிகள் மாத்திரமே இதுவரை புனரமைக்கப்பட்டுள்ளனவெனவும் கூறினார்.

அதேபோல, போதிய கழிவகற்றல் வாகனங்கள் இல்லையெனவும், தவிசாளர் கனகையா தவராஜா கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .