2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்; மூவர் சரணடைந்தனர்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் அ.செவியர் (சயந்தன்) மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், மூவர், இன்று (18) காலை,  முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் அ.செவியர் (சயந்தன்), மணல் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்தார்.

இச்சம்பவம், உப்புமாவெளி கிராமத்தில், வௌ்ளிக்கிழமை (14) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உப்புமாவெளி பகுதியில் உள்ள உறுப்பினர் அ.செவியரின் காணியில் மணல் அகழப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்துச் செவியர், மணல் கொள்ளையர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

இந்தத் தர்க்கம் முற்றி, உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட தாக்குதல் நடத்தியவர்கள் 6 பேர் கொண்ட குழுவினர் எனவும், இவர்கள் உப்புமாவெளி பகுதிணைச் சேர்ந்தவர்களெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொள்டவர்களில் மூவர் இன்றுக்  காலை  முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .