Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சியில், நேற்று (14) மாணவிகள் மூவர், பிஸ்கட் உண்ட பின்னர் மயங்கி விழுந்த நிலையில், அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கந்தபுரம் இல.2 பாடசாலையில், தரம் 3 மற்றும் 7இல் கல்வி கற்கும் மாணவிகளே, இவ்வாறு மயங்கி விழுந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வழமை போல் பாடசாலைக்கு சமூகமளித்த தரம் ஏழுலில் கல்வி பயிலும் மாணவி ஒருவரும், தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரும் பாடசாலைக்கு வரும் போது வழியில் உள்ள கடையொன்றில் ஆளுக்கொரு பிஸ்கட் பைக்கற்றுகளை வாங்கி வந்துள்ளனர். அதனை காலை 10.45 மணியளவில் உண்டுள்ளனர்.
பின்னர் சில விநாடிகளில் மயங்கி விழுந்துள்ளனர்.
இதையடுத்து, அவசரமாக செயற்பட்ட ஆசிரியர்கள், மாணவிகள் மூவரையும் அக்காராயன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .