Niroshini / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
மாறி அமைக்கப்பட்டுள்ள பாலத்துக்கு அருகில் புதிய பாலத்தை விரைவாக அமைக்க வேண்டும் என, பூநகரி பிரதேச சபை உறுப்பினர் சி.சிறிரஞ்சன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் - யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில், பல்லவராயன்கட்டுச் சந்தியில், சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறிய பாலம் ஊடாக கரியாலைநாகபடுவான்குளம், பல்லவராயன்கட்டுக்குளம் என்பவற்றின் நீர் மழை காலத்தில் கடந்து செல்ல முடியாமல் பல்லவராயன்கட்டு வயல் நிலங்களை மூடி நீர் காணப்படும் எனவும் கூறினார்.
இதனால் பயிர் அழிவுகள் ஏற்படுமெனத் தெரிவித்த அவர், வீதிப் புனரமைப்புகளில் ஈடுபட்டவர்கள் இரு குளங்களின் நீர் வருகை தொடர்பாக கவனம் செலுத்தவில்லை எனவும் கூறினார்.
தற்போது உள்ள சிறிய பாலத்துக்கு அருகில் பெரிய பாலம் ஒன்று அமைவதன் மூலமாகவே இரு குளங்களின் நீர் ஏ-32 வீதியை கடந்து கடலுக்குச் செல்லக் கூடிய நிலைமை ஏற்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
"இப்பகுதியில் அமைய வேண்டிய இரு பாலங்களும் முழங்காவில் பக்கமாக ஒரு கிலோமீற்றர் தூரத்தில் மாறி அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதேச சபை அமர்வுகளிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன. குறித்த வீதியுடன் தொடர்புடைய திணைக்களம் புதிய பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையேல் மழை காலத்தில் வெள்ள இடர் மிகுந்த பகுதியாக பல்லவராயன்கட்டுச் சந்தி விளங்கும்" எனவும், சி.சிறிரஞ்சன் கூறினார்.
14 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago