Niroshini / 2022 ஜனவரி 09 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வடமாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, மக்கள் சந்திப்புக்ள நடத்தி வருகின்ற எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, நாளை (10), முல்லைத்தீவு மாவட்டத்துக்கா. பயணத்தை மேற்கொண்டு, மக்கள் சந்திப்பு மற்றும் நிகழ்வுகளில் பங்ககேற்கவுள்ளார்.
நாளை காலையில், புதுக்குடியிருப்பு - வேணாவில் கிராமத்தில் பாரிய மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து, முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றும், மாலை வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறை ஒன்றை கையளிக்கும் நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்ஷயன் முத்துக்குமாரசாமி மற்றும் மாவட்ட அமைப்பாளர் ரிஷாம் அகியோரின் ஒழுங்குப்படுத்தலில், இந்த நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago