Niroshini / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, வடமாகாணத்தில், 113 பேருக்கு டெல்டா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இனங்காணப்பட்ட டெல்டா தொற்றாளர்களில் இரண்டு பொலிஸார் மற்றும் 3 பிரதேசவாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத மக்களாகவே புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் காணப்படுகின்றமை அண்மைய நாள்களில் அவதானிக்க முடிந்துள்ளது. எனவே மக்கள் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ளுமாறு, சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓகஸ்ட் மாதம் மட்டும் 25 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக, மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆத்துடன், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உடலங்கள் தேங்கப்படவில்லை என்றும் அனைத்து உடலங்களும் கட்டம் கட்டமாக வவுனியா, பொலன்னறுவை ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளன.
இன்னும் நான்கு உடலங்கள் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும், அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும், முல்லைத்தீவு – விசுவமடு, பத்தாம் கட்டைப ;பகுதியில், கடந்த 9ஆம் திகதியன்று, வீட்டில் வைத்து உயிரிழந்த நருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago