2025 மே 23, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்ட முற்பட்ட பெண் உள்ளிட்ட 14 பேர் கைது.

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸார்  பிரிவிற்கு உட்பட்ட சிவநகர் கிராமத்தில் இன்று அதிகாலை வேளை புதையல் தோண்ட முற்பட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட 14 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார்  கைதுசெய்துள்ளர்கள்.

இவர்கள் மாத்தளை, தம்புள்ள, கலேவெள, திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பெண் உள்ளிட்ட 14 பேரை கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய மூன்று கார்கள், மற்றும் மடிக்கணணி, கமரா, புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் அதிநவீன ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பெருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள்.

இவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X