Niroshini / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இராணுவம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள், நாளை மறுதினம் (28) விடுவிக்கப்படவுள்ளன என, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் காணிகள், அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் அது உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து மக்கள் புதுக்குடியிருப்பில் மீள குடியமர்ந்த போது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகள், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு, இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கடந்த 2017ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். இதன் விளைவாக, ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன.
குறித்த காணியில், இராணுவத்தினரின் 682ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ளது.
குறித்த முகாமை கைவேலிப் பகுதிக்கு மாற்றிவிட்டு, மிகுதி காணிகள் அனைத்தும் ஆறு மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 7 ஏக்கர் காணிகளே, நாளை மறுதினம் (28) விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
35 minute ago