Editorial / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் இன்று (20) காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் ஊழியர்களின் முயற்சியின் பயனாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரபட்டுள்ளது
சுமார் 1,200 பணியாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தீ ஏற்பட்ட வேளையில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஊழியர்களின் கடின முயற்ச்சியால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது மின்சாரம் தாக்கியதில் பணியாளர் ஒருவரும் சம்பவத்தை கண்டு மயக்கமடைந்த யுவதிகள் இருவரும் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் யுவதிகள் இருவரும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில் மின்சாரம் தாக்கிய இளைஞர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனர்த்தம் ஏற்பட்டதும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதேவேளை கிளிநொச்சியில் இருந்து தீயணைப்பு படையினரும் அழைக்கப்பட்டு தீ முற்றுமுழுதாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் சென்று நிலமைகளை பார்வையிட்டதோடு சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இருப்பினும் தீபரவல் நிலமைகளை பார்வையிட அறிக்கையிட ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





41 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
4 hours ago