2025 மே 16, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் மாற்றம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது, தமிழரசு கட்சிக்குள்ளேயே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இருவர் தவிசாளர் பதவியில் வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, செ. பிறேமகாந்த், தமிழரசு கட்சியின் சார்பில் 17.03.2018 தொடக்கம் 14.08.2020 வரை பணியாற்றி வந்துள்ளார். 

இவர் கட்சி தீர்மானத்துக்கு ஏற்ப தவிசாளர் பதவியை அதே கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் அ.தவக்குமாருக்கு வழங்குவதற்காக, தனது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தைத் தமிழரசு கட்சியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்கள். 

தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைசிங்கத்தின் கையெழுத்து ஊடாக, முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கு  புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளரை மாற்றி புதியவரை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை (18) வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், புதிய பிரதேச சபை உறுப்பினர் அ.தவக்குமார் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .